நானும் என் கவிதைகளும்
ஏல....அறிவுச்செல்வா...!
எங்கல..போய்த் தொலைஞ்ச...சில்லாட்டப்பயல...!
நாலு கவிதை எழுதி வச்சுட்டு தேடுறேன்
(அய்யோ...அண்ணன் ...கவிதையா...?
நாலு நாளாய் வயித்தாலப் போயிட்டு இருக்கு
உங்க கவிதையைக் கேட்டா ஒரே போக்குத்தான்
பேசாம சினிமாவைப் பத்தியே எழுதுங்கன்னேன்...)
அடேய்...அறிவுச்செல்வா...!
இப்படிச் சொன்னாக்க எப்படில?
ஒரு கவித எழுதுறது
எம்புட்டுக் கஷ்டம் தெரியுமால..?
ஆனால் நீ சொல்றதும் சரிதாண்ல...
நானும் எத்தனையோ கவிதைகள்...?எழுதுறேன்
யாரும் படிச்சமாதிரி தெரியல...ல
ஆனால்...சினிமாவப் பத்தி எழுதுனாமட்டும்
விழுந்து விழுந்து படிக்கிறாங்கல...
எல்லாம் சினிமா மோகம்ல.....
என்னையும் சினிமாக்காரங்க மாதிரி
சொங்கி மங்கி ஆக்கிட்டாங்கல....
இப்பலாம் கவித எழுதுறதும்
கஷ்டமா இருக்குல...
எதைப்பற்றி எழுதுரதுனே தெரியலல.....
அரசியல பத்தி எழுதுனா...?
அவதூறு வழக்கு போட்டு
அ(ழ)லய விடுறாங்கல..
மதத்தப் பத்தி எழுதுனா......?
கத்தி...துப்பாக்கிலாம்
தூக்கிட்டு வருறாங்கல...
காதலப்பத்தி எழுதுனா.....?
அஃது இந்த இரண்டையும்விட மோசம்ல...
ஒரு கோஷ்டி காதலிக்கச் சொல்லுறாங்கல....
இன்னொரு கோஷ்டி
காதலிக்கக் கூடாதுங்குறாங்கல.. .
சரி...டுவிட்டலாம்னா.....
உள்ளத்தூக்கிப் போடுறாங்கல.
முகநூலத்திறந்தா...கவர்ச்சியோ கவர்ச்சில.....
அம்புட்டுக் கவர்ச்சி நடிகையும்...அங்கதான்ல...
இப்படியே போனா என்னத்தல எழுதுறது..?
அதுதான்ல...சினிமாவப் பத்தி எழுதுறேன்
அது..சரில...வெளியே என்ன சத்தம் பாருல...?
(அண்ணேன்....மோசம் போயிட்டிங்க...
நீங்கசினிமா பத்திஎழுதுனதில
ஏதோ' பஞ்ச்' அடிச்சிங்கிலாம்
உங்கள பஞ்சராக்க வந்திருக்கு...
ஒரு ரசிகர் பட்டாளமே ..அண்ணேன்...
இவிங்க...அவிங்களவிட மோசம்னேன்...
ஒவ்வொரு பெரிய நடிகர்களும்
அந்தகாலத்து அரசர் போல...
பெரிய படை.பட்டாளங்கள் வச்சிருக்காங்க
நடிகர் போஸ்டருக்கே
ரத்ததானம் பண்ணுவாங்க...
நடிகர் கட்டவுட்டுக்கு
பாலாபிசேகம் பண்ணுவாங்க...)
........................பரிதி.முத்துராசன்