சிரிக்க சில நொடிகள்

தேர்வாளர்:டேய் யார் ரா நீ?
நான்:சார் நானும் கவிஞன் தான் சார்
தேர்வாளர்:தபாரு வேணா போயிடு
சொன்ன கேளு
தலைவர் ரொம்ப கண்டிப்பான ஆளு
நான்:சார் புரிஞ்சிகிங்க
நானும் பெரிய கவிஞன் தான்
சொல்லி கொண்டே தேர்வாளரை தள்ளி முந்தியடித்து கவிஞர்கள் தேர்வு வண்டியில் ஏறி தொங்கிய படி
நான்:வாசகர்களே நல்ல பார்த்துக்குங்க
நல்ல பார்த்துக்குங்க
நானும் கவிஞன் தான்
நானும் கவிஞன் தான்
என்று தொங்கிய படி கூவி கொண்டே கவிதை தளத்தின் தலைமை அலுவலகம் அடைந்து பிறகு
தலைவர் தேர்வாளரை பார்த்து
தலைவர்:யோவ் யார் யா அவன்?
சரியான கிறுக்கன் மாறி இருக்கான்
கவிஞன் ன கூட்டிவாயனா
இவன போய் கூட்டி வந்து இருக்க?
தேர்வாளர்:சார் சொன்ன எங்க கேக்கா
வேணான்னு சொன்னாலும்
விடாபுடியா என்ன தள்ளி விட்டு
ஏறிட்டான்
தலைவர் குறு குறு என்று என்னை முறைத்து பார்த்த படி
தலைவர்:டேய் நீ கவிஞன் னா டா?
நான்:என்ன சார் அப்படி கேட்டுடிங்க?
நாங்களும் எழுதுவோம்மில்ல
கவிதா எழுதறது எங்களுக்கு
கடலை சாப்பிடுராமாறி
சோ சிம்பிள் ........................
நல்ல கேக்குரான்கைய கேள்வியா
தலைவர்:அப்படியா?
எங்க நீ எழுதுன கவிதா ஒன்னு சொல்லு
நான்:அ.....ஆ ...ஆஆ ....ஆகாயம்
வே .........வே...வெவே...வெங்காயம்
பு........பூ ......பூபூ .....புடலங்காய்
கடுப்பான தலைவர்
தலைவர்:டேய் கவிதா சொல்லுடா னா
தமிழ்ல முக்கி முக்கி வாந்தி எடுக்குற
ஆமா உன் கால் ஏன் ஆடுது?
நான்:சார் கற்பனை ஸ்ட்ராங்கு
ஆனா கவிதா தான் கொஞ்சம் வீக்கு
தலைவர்:உண்ணா..................................
தலைவர் அங்கிருந்த தேர்வாளரை பார்த்து
தலைவர்:யோவ் இவன அந்த மொடா குடியான
அடைச்சி வச்சி இருக்குற அறைல
தள்ளுயா
ரெண்டு நாள் அவன்கூட இருந்தான் னா
பய தான வழிக்கு வந்துடுவான்
நான்:சார் வேணாம் சார்
சொன்ன கேளுங்க
விட்டுடுங்க
வேணா சார்
அழுதுடுவேன்
ம்ம்ம்ம்ம்.....உஉஉஉ...... ஊ ஊ ஊ ஊ ஊ
இரண்டு நாட்களுக்கு பிறகு
தேர்வாளர் பதறியடித்து தலைவரிடம்
தேர்வாளர்:சார் சார்
அந்த குடி கார பய செத்துகிடக்கிறான்
சார்
தலைவர்:யோவ் என்ன யா சொல்ற
பதறிய படி இருவரும் என்னை அடைத்து வைத்த
அறையை திறந்து என்னிடம்
தலைவர்:டேய் என்ன டா செஞ்ச?
நான்:சொன்னோம்முள்ள
கேக்கனும்முள்ள
நீங்களும் கேக்கல
தோ செத்து கிடக்கே இந்த மூதேவியும்
கேக்கல
போதைல கவிதா சொல்லு கவிதா சொல்லுனு
உசுர வாங்குனான்
நானும் வேற வழியே இல்லாம
நம்பி..............சொன்னேன்
பாதியிலேயே மண்டைய போட்டன்
மீதி இருக்கு நீங்க கேக்குறிங்களா?
தலைவர்:ம்ம்ம்ம்ம்.....உஉஉஉ...... ஊ ஊ ஊ ஊ ஊ
தோழர்களே கண்டிப்பாய் நீங்க சிரித்து இருப்பிர்கள்
என்ற நம்பிக்கையில்