மன்மதலீலை பாடிய பாகவதரின் ஹரிதாஸ்

பாகவதர் படம் ஹரிதாஸ்
பக்கத்தூர் டூரிங் டாக்கீஸில்
எத்தனனை முறை பார்த்தேன்...?

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
எத்தனை முறை பாடினேன்...?
எதுவும் தெரியாதாம் எங்க தாத்தாவுக்கு!
ஆனால்......
இந்தப் பாட்டைப் பாடியே
பாட்டி மனதில் இடம்பிடித்து
பட்டையைக் கிளப்பிட்டார் தாத்தா.
அதுமட்டும் ஞாபகம் இருக்கும் அவருக்கு.

என்ன வித்தியாசம்.....?
படத்தில் ராஜகுமாரி
மன்மதமலர் அம்பு வீசுவார்.......
நிஜத்தில் தாத்தா....
பாட்டிக்கு மாலை சூடிவிட்டார்)

அவர் மண்ணுக்குள் போகும்வரை
அவர் வாய் முனுமுனுக்கும்
பாட்டியை நினைத்து.............
மன்மத லீலையை வென்றார் உண்டோ?

அந்தக் காலத்திலிருந்து
இந்தக் காலம் வரை
எந்தக் காலமானாலும்
இப்படித்தான் இருந்திருக்கு சினிமா...!

அந்தப் பாகவதர் மட்டும்
அந்தக் காலத்தில்....
வெள்ளையனே வெளியேறு
என்று பாடியிருந்தால்....
அன்றே வந்திருக்கும் சுதந்திரம்

அந்தக் காலத்திலிருந்து
இந்தக் காலம் வரை
எந்தக் காலமானாலும்
இப்படித்தான் இருக்கின்றனர்
இந்தச் சினிமா பிரபலங்கள்

சினிமா உலகச் சிங்கங்களே!
உங்கள் விஸ்வரூப(ம்)த்தை
நாட்டு நலனுக்குக் காட்டுங்கள்...

உங்கள் சிந்தனைக்கடல்
சமுதாய அவலங்களை அழிக்கும்
சுனாமியாக வரட்டும்....

உங்கள் துப்பாக்கி சத்தம் கேட்டு
அறியாமை அலறி ஓடட்டும்

நல்லவர் இவரென்று உம்மை
நாளைய வரலாறு சொல்லட்டும்

அன்று(1944) சினிமாவில்
பாகவதர் தொடங்கிய மன்மதலீலை
காமக்களியாட்டம்
இன்றுவரை தொடர்கிறது...
பாலியல் வன்கொடுமைக்கு
அதுவும் ஒரு காரணமாக இருக்கு

யோவ்!பரிதி! நல்ல ஆளுயா நீ!
இங்கே நடிகர்கள் பஞ்சம் வந்திருக்கு
இங்கே நடிப்பதற்கு தமிழ் நடிகர்களே இல்லை
இப்போதெல்லாம் நடிகர்கள் பிழைப்பே
பெரிய திண்டாட்டத்தில் இருக்கு...
பெரிய நடிகர்களே ஊரைவிட்டு போகலாமானு
ஜோதிடம் பாத்துக்கிட்டு இருக்காங்க....}

............................பரிதி.முத்துராசன்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (19-Feb-13, 4:38 pm)
பார்வை : 117

மேலே