இலங்கை கடற்படையும் - தமிழக மீனவர்களும்

தவிக்கிறான் தமிழக மீனவன்
தாக்குகிறான் நடுக் கடலில்
இரக்கமிலா இலங்கைக்காரன் !

கடலை நம்பியே வாழ்பவர்
கண்ணீரில் மிதக்கின்றனர்
கடற்படை தாக்குதலால் !

கொன்று குவித்தான் தமிழரை
மென்று தின்றான் குருதியுடன்
வென்று வெறி அடங்கும்வரை !

இன்னும் அலைகிறான் தேடி
இனத்தை அழித்த இடிஅமீன்
இங்குள்ள தமிழரை கொல்ல !

ஈனப்பிறவியா தமிழன் அவனுக்கு
ஈழத்திலும் வாழ்ந்திட வழியில்லை
ஈரவலை விரிக்கவும் உரிமையில்லை

இதயம் இல்லா இந்திய அரசோ
இருகரம் கூப்பி வரவேற்கிறது
இலங்கை அரக்கனை அணைக்கிறது !

தத்தளிக்கும் மீனவனோ அழுகிறான்
தண்ணீரில் மிதந்து பிழைப்பவனோ
கண்ணீரில் நனைந்து நிற்கிறான் !

துடைத்திடுவோம் மீனவரின் துயரை
மீறிடுவோம் கட்சிகளின் எல்லைகளை
வாழ வைப்போம் நம் மீனவர்களை !

இணைந்திடுவோம் இனத்தவரைக் காக்க
ஒன்றிடுவோம் ஓநாய்களை ஒடுக்கிட
தமிழர் யார் என்பதை காட்டிடுவோம் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Feb-13, 8:46 pm)
பார்வை : 115

சிறந்த கவிதைகள்

மேலே