எதிர்காலம் இருண்டதே!

எதிர்காலம் இருண்டதே!

பால் மணம் மாறாத பாலகன்
இவன் இழைத்தது என்ன குற்றமோ?
பிரபாகரனென்ற ஈழப்புலியின்,
மைந்தனென பிறந்ததொரு குற்றமோ?
வேட்டையாடிக்கொல்லப்பட்ட தமிழ்
குலமதை சான்றதொரு குற்றமோ?

திரு நீரிட்டு பரவசத்துடன்,
பள்ளி செல்லும் வயதினில் நீ,
பன்றியர் சிங்களவர்,
வெறியுடன் சுட்டு வீழ்த்த,
தோல்வியை கண்டவன் போல,
முதுகதனை காட்டாமல்,
சல்லடையின் துளைகளையும்,
கணிப்பதனில் முறியடித்து,
வீர தமிழரின் மரபதனின்,
போர்களத்தின் முறைப்படியே,
குண்டுகளை மார்பேந்தி,
வீரமரணம் நீ எய்தாய்!

அரசியல் சுழற்காற்றில்,
ஆதாயமதை தேடி,
பாதுகாப்பதனை உனக்களிக்க,
மறந்திட்ட உலகதனில்,
வாழ்வதிலும் கூசுகிறேன்,
வெட்கி தலைகுனிகிறேன்!

கல்கத்தா சம்பத்

எழுதியவர் : கல்கத்தா சம்பத் (20-Feb-13, 6:08 pm)
பார்வை : 166

மேலே