காதலே இன்பம்

காணாத இன்பம் கண்டேன் பேதையின்
அகத்தில் பொங்கும் புது மலர்ச்சியை கண்டேன்
முத்து முத்தான வார்த்தைகள் அமுதம் போல
அவள் பேச்சினில் தித்திக்கக் கண்டேன்
என்னவென்று கேட்க மங்கை உள்ளத்தில்
நாணம் குமிழிகள் ததும்பக் கண்டேன்
பூ மொட்டாய் மலர்ந்த உதடுகள்
காதல் எனும் தேனை மெல்லச் சொரியக் கண்டேன்

பெண்ணே அறிந்து கொண்டேன் காதலின்
மாயத்தை நன்குப் புரிந்து கொண்டேன்
இயற்கை எழிழை மெச்சும் இவ்வுலகினில்
காதல் போற்றி ஆரதிப்பதைக் கண்டேன்
உறவுகள் இன்றி வாழ்வர் சிலர் ஆயின்
காதல் இன்றி வாழ்வர் யார் இம்மண்ணிலே
விளங்கிக் கொண்டேன்
நாட்கள் மறைந்தாலும் பருவங்கள் மாறினாலும்
காதல் அழிவதில்லை என்றும் நேசம் முறிவதிலை


வியந்தேன் காதல் ஆழத்தை கண்டு வியந்தேன்
கடலலை எழுப்பிடும் ஓசை காட்டிலும்
அழுத்தமான காதல் சூரலை கண்டதும்
விண்மீன்கள் மனதில் மின்னிட உணர்ந்தேன்
இருளை மட்டும் இரசித்த விழிகள் இன்று
ஏனோ விடியலை நோக்கி மெல்ல மலர்வதை அறிந்தேன்
தெளிந்தேன் என்னுள் உதிக்கும் உணர்வு
காதல் என்பதை அறிந்ததும் உன்னிடத்திலே சரணனடைந்தேன் !

எழுதியவர் : புலவர் தேன்மலர் (21-Feb-13, 1:22 pm)
Tanglish : kaathale inbam
பார்வை : 115

மேலே