நீ வருவாய் என... (என் வீட்டு மகாலக்ஷ்மிக்காக)

எல்லோருக்கும்
மனைவியாய் வருபவளை
நம் வீட்டு மகாலட்சுமி என்போம்.

ஆனால் எனக்கு மட்டும்
மகாலக்ஷ்மியே மனைவியாய்...

நீ வந்த பின்பே
நான் ஆசிரியரானேன்...

ஆதலால் நீ லக்ஷ்மியாய்
சரஸ்வதியாய்
எனக்கு மட்டும்...

கடவுளைப் போல்
நீ என்னை
அவ்வபோது சோதித்தாலும்...

பக்தனை போல் சரணடைவேன்
உன்னிடத்தில் எப்போதும்...

வாழும் நாள் வரை
எனக்கு
வரலக்ஷ்மியாய்
சாந்தலக்ஷ்மியாய்...
சர்வலக்ஷ்மியாய்...

நீ வருவாய் என
காத்திருக்கும்
உனது அன்பன்...

எழுதியவர் : நெய்யாடுபாக்கம் ஜெயபிரகா (25-Feb-13, 10:12 pm)
சேர்த்தது : neyyadupakkam jayaprakash
பார்வை : 143

மேலே