தொலைக் காட்சி

தொலைக்காட்சி வந்தது நாட்டில்
தொல்லைகள் மறந்தன பலருக்கு !

வழிந்திட்ட திரை அரங்கம் போல்
வழிகிறது வீட்டின் வரவேற்பறை !

உள்நாட்டு செய்திகளும் வந்திடும்
உலக நிகழ்வுகளும் தெரிந்திடும் !

கலகலப்பு காட்சிகளும் காணலாம்
களைப்பு வரும் தொடர்களும் உண்டு !

குடும்பத்து நிகழ்வுகள் திரையில் வரும்
நடைபெறும் குற்றங்களும் அறிய வரும் !

முடிந்திட்ட செய்தியும் விரைவாய் வரும்
விடிந்தாலும் மீண்டும் மீண்டும் வரும் !

திரையிட்ட படங்களும் பார்க்கலாம்
திரைக்கு வராத பாடலை ரசிக்கலாம் !

விவாத மேடைகளும் விரிவாய் வந்திடும்
முடியாத தீர்வுடன் காட்சிகள் முடியலாம் !

வளர்ந்திடும் தொடர்களோ தொடர்ந்திடும்
முடிக்க தெரியாத கதைகளும் வந்திடும் !

கண்ணைக் கவரும் விளம்பரங்கள் உண்டு
கண்ணயர சிறிது இடைவெளியும் உண்டு !

தொலைக்காட்சி பெட்டிகள் இல்லாத இல்லம்
தொல்லைகளே இருந்திடா நல்ல குடும்பம் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (25-Feb-13, 9:54 pm)
பார்வை : 112

மேலே