எங்கே என் தேசம் ...

கொடை குணம் கொண்ட
வள்ளல்களை சங்க காலத்தில்
அறிந்ததுண்டு ...
படை குணம் கொண்ட
பாரினை ஆண்ட மன்னர்களை
கேட்டதுண்டு ...
மடை திறந்த வெள்ளத்தை
மழைக்காலங்களில்
கண்டதுண்டு ...
வடைக்காக காக்கை
நரியிடம் ஏமாற்றமடைந்ததுண்டு...
ஆனால் இன்று
விடைக்காக கேள்வித்தாளை
விற்பனை செய்பவருமுண்டு ...
எடைக்காக மக்களை
ஏமாற்றுபவருமுண்டு...

எழுதியவர் : (26-Feb-13, 1:44 pm)
பார்வை : 155

மேலே