பெண் சிசுக்கொலை
பாலுக்காக அழுதேன் ....................
தாய் பால் இருந்தும்
தர மனமில்லாமல்
கள்ளிப் பாலை
கள்ளத் தனமாகத்தந்து
என் ..................
இரு கண்களையும் மூடினாள்
உருவாக்கியவளே.............என்னை
உருக்குலையச்செய்தாள்
பெண்ணாய்ப் பிறந்ததால்
பெற்றத் தாயின் மடியில்
இடமில்லை எங்களுக்கு
ஆனால்................
எப்போதும் இடமுண்டு.......................
பாரதத் தாயின் மடியில் .............