உணவுப் பழக்கம்..............ஒரு பார்வை
1.சிக்ஸ் பேக்... எய்ட் பேக் வந்துவிட்ட காலத்திலும் சிங்கிள் பேக் (தொப்பை) எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடே இல்லை..!
2.உணவானது... காலை முழு வயிறு.. மதியம் அரை வயிறு... இரவு கால் வயிறு என்ற கணக்கு வழக்கொழிந்தே போய்விட்டது..!
3.சுக்கு மிளகு திப்பிலி... என்பது முகலாய சாம்ராஜ்யத்தில் இருந்த மூன்று அமைச்சர்களின் பெயர்.
4.மூன்று வேளைக்கான உணவு நேரம்...... வீட்டு அரசிதழில் வெளியிடப்பட வேண்டும்...அரைமணி நேரம் முன்பின் இருத்தல் தவறில்லை...
5.ஒரு நாளில் முழுவதாய் ஒரு மணிநேரம்....மூன்று வேளை உணவுக்கு ஒதுக்கப்பட வேண்டும்....
6.ஒரே ஒரு சப்பாத்திதான் மிச்சம் இருக்கு... குப்பையில தான் போடனும் நீயே சாப்பிட்டு முடிச்சிரு.....என வயிறை குப்பைத்தொட்டி ஆக்குவார்கள்.. எச்சரிக்கையாய் இரு.
7.செரிமானத்துக்கு அதிகமாய் தின்பதும்...அது செரிக்க செவன் அப்... பெப்சி குடிப்பதும்... என்ன ஒரு அப்பாடக்கர் பந்தா?
8.இரவில் கீரை மற்றும் தயிர் தவிர்...உணவுக்கு முன்னும் பின்னும் தண்ணீர் கொள்...
9.துரித உணவும் தவிர்....துரிதமாய் உண்பதும் தவிர்...
10.வயிறு பசிக்க உண்....வயிறு பொறுக்க உண்...