தென்னம்பிள்ளை

என் வீட்டுக் குடிசையில் ............................
நான் பெற்றப் பிள்ளை ஒன்று
நான் வளர்த்தப் பிள்ளை ஒன்று
நித்தமும் நீருற்றிவளர்த்தேன்
நிமிர்ந்து வளர்ந்தாய் நிழலும் தந்தாய்
என் வீட்டின் குடிசைக்குக் கூரையாய்
தாகம் தீர்த்தாய் இளநீராய்
வீட்டை தூய்மை செய்யும் துடப்பமாய்
சமையலில் சுவைக் கூட்டினாய்
என் மகளின் சடங்கில் வீட்டிற்குள் குடிசையாய்
என் வீட்டுத் திருமண வைபவத்தில்
வாசலில் தொங்கும் குலையாய்
உன் மூலம் பணம் பெற்றதால்
என் பொருள் ஈட்டளிலும் உனக்குப் பங்குண்டு
நாணயம் தேட நாடு விட்டு நாடு சென்றான் நான்வளர்த்தப்பிள்ளை .........................
மண்ணோடு செல்லும் போதும்
மல்லாக்கா படுத்தேன் உன் மீது
பச்சை ஓலையில் பாடை கட்டி
பல பேர் பார்க்கும்படி
செல்லும் சவ ஊர்வலத்திலும்.....
சுட்ட சட்டி சுமந்து வர
சுமந்தப் பிள்ளை இல்லையே............
நான் பெத்தப் பிள்ளை இல்லையே
பெறாதப் பிள்ளையாய்
என்னோடு எப்போதும்
பிரியாதப் பிள்ளை............
நான் வளர்த்தப் பிள்ளை ...............
தென்னம் பிள்ளை .................

எழுதியவர் : munaivar va inthiraa (27-Feb-13, 10:50 pm)
பார்வை : 144

மேலே