பாரதிக்கு புகழ் வணக்கம்
முண்டாசுக் கவிஞனின்
மூச்செல்லாம் விடுதலை!
உணர்வுகளை உசுப்பி
வீரமதை விதைத்திட்ட
எழுசிக்கவிதைகள்!
புகலிடம் தேடியதால்
புண்ணிய பூமியாகிய
புதுவை மண்ணும்!
தேசிய சிந்தனை
தேர்ந்த நல் குறிக்கோள்!
வீழ்ந்த சமுதாயம்
மீண்டெழக் காரணம்!
அறமும் வீரமும்
மண்ணின் மகத்துவம்!
நின் பாடலில் எங்கும்
மனித சமத்துவம்!
உயிர்களிடத்தில் அன்பு
உயர் மானுடப்பண்பு!
நல்லோர் ஆயுளை
நசுக்கிய காலன்!
கல்லில் செதுக்கிய சிற்பமும்
காலத்தால் பொலிவிழக்கும்!
தமிழால் செதுக்கிய நின் புகழ்
தமிழரின் நெஞ்சில் நிலைக்கும்!
மூச்சிருக்கும் வரை நின் நினைவிருக்கும்
தமிழிருக்கும் வரை
நின் புகழ் ஒலிக்கும்!