குலோத்துங்க சோழன் கோவை - நூல் - ஒன்பதாவது - பாங்கிமதியுடன்பாடு - நெஞ்சு வினாதல்- பாடல் 87
அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-
தலைவன் பாங்கனைச் சார்தல்.
பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்
தலைவ னுற்ற துரைத்தல்.
கற்றறி பாங்கன் கழறல்.
கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.
பாங்கன் கிழவோற் பழித்தல்.
கிழவோன் வேட்கை தாங்கற்கருமை சாற்றல்.
(இ-ள்) தலைவன் பாங்கனைநோக்கி நீ பழிக்கின்ற என்னுள்ளந் தேறுதற்கு வேட்கை யென்னாற் றாங்கமுடியாதென்று கூறுதல்.
இதுவுமது.
பாங்கன் றன்மனத்தழுங்கல்.
ஒன்பதாவது - பாங்கிமதி யுடன்பாடு.
அஃதாவது--தலைவி வேறுபாட்டைப் புணர்ச்சியுண்மை யறிந்தாராய்ந்து தோழி தன்மதியை யுடன்படுத்தல்; அது: முன்னுறவுணர்தல், குறையுறவுணர்தல், இருவருமுளவழி யவன்வரவுணர்தலென மூன்றுவகைப்படும்;
அவற்றுள் - முன்னுறவுணர்தலாவது தலைவனைப் புணர்ந்து மீண்டுவந்து தன் முன்னுற்ற தலைவியின் வேறுபாட்டைப் பாங்கி கண்டு அதனானே கூட்ட முண்மையறிதல்;
அது: வகையின் வகையாய் ஐயமுற்றோர்தல், ஐயந்தீர்தல், பல்வேறு கவர்பொருட் சொல்லி நாடல் என மூன்றாம்;
அவற்றுள்- ஐயமுற்றோர்தல் பலவகைப்படும்;
குறையுறவுணர்தல்.
அஃதாவது-தலைவன் தழைமுதலியவற்றைக் கொண்டு தன்பாற் குறையுற்று நிற்பக்கண்டு பாங்கி அதனானே கூட்டமுண்டென்றறிதல்; அது: தேர்தல் தெளிதலென இருவகைப்படும். தேர்தல்-ஆராய்ச்சி செய்தல். அவைவருமாறு:-
பெட்டவாயில் பெற்றிரவு வலியுறுத்தல்.
ஊர்வினாதல்.
பேர்வினாதல்.
கெடுதிவினாவல்.
நெஞ்சு வினாதல்.
(இ-ள்) தலைவன் தன் மனத்தைப் பாங்கியிடை வினாவுதல்.
கட்டளைக் கலித்துறை
நஞ்சோ டெதிரு மொருவாளி தைத்துநை வாங்கலைபின்
மஞ்சோ டுவமிக்கும் வார்குழ லீரந்த வானவர்கா
வஞ்சோட நல்குங் குலோத்துங்க சோழ னளகையிலென்
னெஞ்சோடி வந்ததுண் டோசொல்லும் வாய்மலர் நீர்திறந்தே! 87