வீரத்தமிழனின் விழுது

சுயநலமற்ற தந்தைக்கு
மகனென்பதாலும்,
வீரப்பரம்பரையின்
விழுதென்பதாலும்
அவசர அவசரமாக
அழிக்கப்பட்டிருக்கிறது உன் தடம்...

தனியே பள்ளி செல்லத் தவிக்கும்
தமிழ்ப்பிள்ளைகளுக்கு நடுவில்,
பகைவனிடம் செல்லுகையில் கூட
பயப்படவில்லை நீ...
அது சரி....,
தப்பாமல் பிறந்த
தமிழ்மகனல்லவா...


ஏதுமறியா அப்பாவியாய்
இறுதிக்கணத்தில் இருந்திருக்கிறாய்
என்பதை
ஏங்கித் தவிக்கும் உன் விழிகள்
எமக்குத் தெரியப்படுத்துகின்றன..

வரவேற்று உணவளித்து
வாழ்த்தியனுப்புவது
தமிழன் பரம்பரை .
உணவளித்த பின்
உயிரை எடுப்பது
சிங்களவன் வரைமுறை

ஆயுதபூசைகளுக்கு நடுவில்
அவலக்குரல் எழுப்பியிருப்பாய் நீ ..
இப்போது தான்
உலகக் கடவுள்களில்
ஓரிருவர் கண்கள்
நீர்த்து நிறைகின்றன...!


பிறந்ததிலிருந்து
இறந்ததுவரைக்கும்
எறும்பைக்கூட மிதித்திருக்கமாட்டாய்...
உன்மீது அதற்கான பரிசு
ஒன்பது துளைகளாய் ...!


தலைவன் மகன் என்றால்
அர்த்தம் வேறாயிற்றே..?!!!
அரண்மனை வாழ்க்கை,
அரசவைப் பல்லக்கு,
முன்னேயும் பின்னேயும்
முப்படை.....,
பாடங்களில் இப்படித்தானே
படித்திருக்கிறோம்..

எழுதியவர் : copied (28-Feb-13, 12:27 pm)
சேர்த்தது : வானவில்
பார்வை : 180

சிறந்த கவிதைகள்

மேலே