நின் வழியிலேயே!

நினைத்ததும்...
நிகழ்ந்ததும்...
எதிர்வும் முடிவும்
வளர்த்ததுவும்
வாழ்ந்ததுவும்...
எல்லாம் எல்லாமே
நின் வழியிலேயே.

நிஜமும் பொய்யும்
நீயே அறியும்
நாளில்
வலி மட்டும்
எங்கேயோ...

தொலைக்கவும் தொலையவும்
இன்னும் யாராவது...
இருக்க
உன் இன்பம்
தூரமில்லை.

யாதுமாகி நீ
நிற்க
துன்பம் மட்டும்
ஏனடி
எனக்கு மட்டும்...

எழுதியவர் : சசிதரன் (19-Nov-10, 10:38 pm)
சேர்த்தது : sasidaran
பார்வை : 333

மேலே