தமிழா


செந்நெல் மாற்றிய சோரும் - பசுநெய்
தெக்கிய கரியின் வகையும்
தன்னிகர் தானியம் முதிரை- கட்டித்
தயிரூடு மிளகின் சோரும்
நன் மதுரஞ் செய்கிழங்கும்
நாவிலி னித்திடும் அப்பம்
உன்னை வளர்ப்பன தமிழா- உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே

எழுதியவர் : பா.பாரதிதாசன் (19-Nov-10, 10:34 pm)
சேர்த்தது : Karthik Chidambaram
பார்வை : 312

மேலே