நட்பு ஆண்டவனின் படைப்பு ..!

நட்பு ஒரு உறவு அல்ல
ஆண்டவனின் படைப்புக்களில் ஒன்று
ஆண்டவன் வடிவமைத்த கலைகளில் ஒன்று
உலகில் அதி சிறந்த பரிசு நட்பு.மட்டும் தான்
நட்புக்கு நிகர்நல்ல நட்பே!
அழகிய மாடம் நட்பு.

தூய்மை அதன் அரண்.
மெய்மை அதன் உரம் .
தியாகமே அதற்கு உணர்வு ...!
உன்னை எடை போட....
உன் நட்பு போதுமாகும்....!

நம்பிக்கை நாணயம்அதன் கலவை ..!
துன்பத்தில் சம பங்குதான் நல் நட்பு.
உன் விழியில் கண்ணீர் வந்தால்
நட்பின் விழியில் கண்ணீர்வருவதே நல்ல நட்பு..!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (2-Mar-13, 9:07 am)
பார்வை : 573

மேலே