2 மணி நேர மின்தடை ஆரம்பித்த வேளையில்.....

குளிரூட்டி
நின்றதால்,
நண்பன்
போட்ட
புழுக்கக் கூப்பாடெல்லாம்
கேட்காமலேயே
போய்விடுகிறது.....
எங்கேயோ,
அரவை நிலையத்தில்
இயந்திரம் நின்றதால்,
மிளகாயைப்
பொடியாக்கிக் கொண்டிருந்த
பொடித்தொழிலாளி ஒருவன் விட்ட
ஒரு நொடிப்
பெருமூச்சினால்.....