எங்க காலத்துப்பெண்கள்

பெண்கள் அடிமையாக நடத்தப்பட்டாதாக கருதப்பட்ட காலத்துப்பெண்களை
மட்டுமே நான் இங்கே குறிப்பிடுகிறேன், அக்கால பென்கள் வீட்டுக்குள்
இருந்துகொண்டு வெளிஉலகம் அறிந்தவர்கள், ஆண்களுக்கு தங்கள் வீட்டு
பெண்களை ந்ன்றாக பாதுகாத்துக்கொள்ள திறமை இருந்தது,குடும்பம் என்பது
ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்தாலும் பெண்களின் பங்கு குடும்பத்தில்
மிக முக்கியமாக கருதப்பட்டது ,

ஒன்றுமே இல்லாத விஷயத்துகெல்லாம் விவாஹரத்து என்று கோர்ட்டுக்கு
அலையும் இக்காலத்தில் கணவரே கண்கண்ட் தெய்வம் என்று இருந்த
அக்கால பெண்கள் அடிமைகள் இல்லை வாழ்க்கையை அதன் எதிர்கால
விளைவுகளை உணர்ந்த பொறுமையினசின்னங்கள்

விளைவுகளை உணர்ந்த பொறுமையின் சின்னங்கள்


கணவரிடம் எந்த ஒரு முக்யமான குடும்ப விஷய்ங்களை மறைக்காமல்
சொல்வார்கள், கணவருக்கு அக்கால பெண்கள் கொடுக்கும் மரியாதை
குழந்தைகளும் பின்பற்றும் விதமாக இருக்கும் , ஆண்கள் எப்படிப்பட்ட
தவறு செய்தாலும் அன்பின் வழியில் திருத்திய பெண்களும் இருந்தார்கள்
அக்கால பெண்களின் நளினமான குணம் ஆண்களை மரியாதை

கொள்ளச்செய்தது, ப்த்து சதவிகிதம் ஆங்காங்கே குறை உடையகுணம் கெட்ட
பெண்கள் இருப்பதே அப்போதெல்லாம் அபூர்வம் ஆண் பெண் சம உரிமை
என்றெல்லாம் கூறும் பேச்சுக்கள் புரியாத புனிதமான பெண்கள்
உடை உடுத்துவதின் அர்த்தம் தெரிந்த அழகான நளினமான பெண்கள்
ஆண்களை மதித்து அவர்களை அன்பினாலும் தாங்கள் செய்யும் பணிவிடையாலும்
அடிமை செய்த அறவழி நடந்த தூயமாந்தர்,


பெண்களை கண்டவுடன் மரியாதை செய்த அக்கால ஆண்கள் , ஆண்கள்
தங்கள் மரியாதையை பெண்களிடம் கேட்டுத்தான் பெற்றுக்கொள்ளணும் என்ற
தேவை அன்று இல்லாமல் இருந்தது , கணவருக்கு கல்வியில் அவர்தம் பணியில்
கைகொடுத்த பெண்கள் அப்போது இருந்தார்கள் அங்கே ஈகோ ப்ர்ச்னைக்குகொஞ்சமும்

இடமில்லை குடிசை தொழில் செய்த கிராமத்துப்பெண்கள், குடிகார கணவருடன்
போராடிய பெண்கள் இவர்களெல்லாம் கொண்டாட வேண்டியது பெண்கள் தினம்
என்னை பொறுத்த அளவில் “பெண்களின் சுதந்திரம்” நளினம் நடை உடை
பாவனை அடக்கம் அன்பு தொண்டு செய்யும் பணிவு பொறுமை துணிவு
இவற்றால் மட்டுமே பெற முயற்ச்சிக்கணும்

எழுதியவர் : (2-Mar-13, 3:32 pm)
பார்வை : 322

மேலே