மகளிர்
காலை கதிரவனின் உதயதிருக்கு முன் விடியல் அவளுக்கு
விழித்தது முதல் இரவு உறக்கம் வரை கடிகாரத்தின் வேலையும் அவளுக்கு
ஆயிரம் வேலை இருந்தும், வேதனைகள் இருந்தும்
சற்றும் சலித்து போகாத முகம் அவளுக்கு
ஒரே நாளில் இவள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் தான் எத்தனை எத்தனை
காலையில் வேலைகாரியாக,
நண்பகலில் அலுவலகத்தில் பணிபெண்னாக,
மாலையில் தாயாக, மனைவியாக
சிலருக்கு தோழியாக, சகோதரியாக
என எதன்னை முகங்கள் இவளுக்கு
உழைத்து உழைத்து மறுத்து போயின கைகள்
ஆனால் இன்னும் சிரித்த படியே எனக்கு உணவு அளிப்பது தான் வியப்பு
உணர்ச்சியற்ற பாத்திரங்களும் இவள்
கை பட்டதால் பளிச் பளிச்யேன பல் இளிக்குது
கழட்டி போட்ட அழுக்கு துணிகளும்
இவள் சுவாசத்தால் மன மணக்குது
அமைதியான நதியானாலும் சரி
ஆர்பரிக்கும் புயலானாலும் சரி
அத்தனைக்கும் இவள் பெயர் தான்
இவளை இன்று கொண்டாடுவதில் பெருமிதம் தான்.... எனக்கு..

