பெண்மையைப் போற்றுவோம்!

உண்மை நிரந்தரமாய் வாழ ஒரு இடம் தேடியது.அது

பெண்மையில் நிறைந்து நீங்காது வாழ்ந்தது.

அன்பிலாது உயிர்கள் துன்பிலே மாண்டது.

பெண்மையே அன்பாகி உலகையே சூழ்ந்தது.

உலக மாயையில் உயிர்கள் பேயாய் அலைந்தன.

தாயாய் தாரமாய் பெண்மை தகைமை கொண்டது.

இதமற்று உலகம் இருண்டு வரண்டது.

இதயத்து ஒளியுடன் பெண்மை நன்மை கொணர்ந்தது .

உலகமே கலகமாய் பலகாலம் நிகழ்ந்தது.

அமைதியாய் பெண்மையே ஆனவரை காத்தது.

நியமமும் நியாயமும் நிலைத்திட வேண்டியே

நேர்மையாய் பெண்மை பேரியல்பு உற்றது.

ஆக்கமும் ஊக்கமும் உலகிற்கு நல்க பெண்மை

உற்சாகமாய் ஓராயிரம் சாகசம் புரிந்தது.

பெண்மையைப் போற்றுவோம்!

பெண்மையைப் போற்றுவோம்!

நானிலத்தில் நன்மையே பெருக்கும்

பெண்மையைப் போற்றுவோம்!


பாலு குருசுவாமி.

எழுதியவர் : பாலு குருசுவாமி. (8-Mar-13, 1:14 pm)
பார்வை : 164

சிறந்த கவிதைகள்

மேலே