அதுவும் அவளும்

ஆரஞ்சு பழத்தை
விழுங்கிபடியே குமுறியது அது
கட்டைகளில் மிதந்தோர்
குச்சிகளால் குத்தித்
தள்ளிக்கொண்டிருந்தனர்
அதன் வயிற்றில்.
செரிக்காமல் நுரைகக்கிய அதன்மேல்
விழுந்து விழுந்து
அணைக்க முயன்றவளைத்
தள்ளிக்கொண்டேயிருந்தது.

சிரித்த அவளின்
உள்ளாடைக்குள் மணல்நிரப்பி
வன்மம் தீர்த்தபின்
தொலைவாகிப் போனது
குழந்தைக்குக் கடல்.

இப்பொழுதெல்லாம் அவள்
கால் மட்டுமே நனைக்கிறாள்
கட்டியணைப்பதில்லை.

எழுதியவர் : சுபத்ரா (9-Mar-13, 8:27 pm)
சேர்த்தது : சுபத்ரா
பார்வை : 98

மேலே