[432] குதிப்பதேன் ?கொதிப்பதேன்?பழிப்பதேன்? கொல்வதேன்?
குதிப்பதேன் ?கொதிப்பதேன்?பழிப்பதேன்? கொல்வதேன்?..........
ஒட்டும் உடைகளில்
ஒட்டிய கண்களை
உடன்நீ எடுத்துச்
செல்கிறாய்!
தொட்டுப் பார்த்தால்
தொந்தர வென்றே
துரத்திக் கூச்சல்
செய்கிறாய்!
பட்டும் படாத
ஆடைகள் உடுத்திப்
பச்சை அழைப்புக்கள் விடுக்கிறாய் !
ஒட்டப் பார்ப்பவர்
உளநிலை தவறென
ஊரைக் கூட்டி
அடிக்கிறாய்!
கண்ணகி போலே
இருப்பது தவறெனக்
கண்டவள் போலக்
குதிக்கிறாய்!
உண்மையில் மாதவி
உன்னுள் என்றால்
உரைப்பவர் கண்டு,ஏன்
கொதிக்கிறாய்!
மெருகை அழகை
மிதமாய்க் காட்டி
மிடுக்காய் நடக்க
மறக்கிறாய்!
உருவை எடுப்பை
உயர்வாய்க் காட்டி
உடன்வரச் செய்து,ஏன்
பழிக்கிறாய்!
விசுவா மித்திரர்
போலவே ஆண்கள்
விருப்பமே இன்றி
இருக்கவோ?
ருசிவாய் கண்ட
பூனைகள் என்றெமைக்
கொசுவாய் மாற்றிக்
கொல்லவோ?
========= ++++++++ ========== ++++++++
இது மகளிர் தினத்தை ஒட்டிய பாடல் அல்ல.
******************************************************************
மகளிர் தினம் பெண்ணை அழகு பதுமையாக ஆக்கும் ஆண் வர்க்கத்தின் ஒரு வகை உத்தியே . நிச்சயம் பெண்கள் இன்னும் சாதிக்க வேண்டும் போற்றுதலுக்கு உரியவர்கள் ஆக வேண்டும் கருணை ,அன்பு ,அறிவு இவை யாவிலும் பெண்களின் பங்களிப்பு இல்லம் தாண்டி சமுக அமைப்பில் மிளிர வேண்டும்-----. சிந்தா..
மகளிர் தினம் கொண்டாடுவது.....
பாதையாக இருக்கும் மகளிர்காக...
போதையாக இருப்பவர்களுக்கு அல்ல !................
என்ன தரவு வைத்திருக்கிறீர்கள் பெரும்பான்மை பெண்கள் தப்பு செய்கிறார்கள் என்று இத்துனை உறுதியாய் கூறுவதற்கு ?..................
இவையெல்லாம் வன்முறைகளுக்கு எதிரான போராட்ட தினங்கள் !--- K.S.கலை
பெண்களின் தடம் முற்றிலும் மாறிவிட்டது இது சரியாகுமா என்றால் பெரிய கேள்விக்குறிதான்.........
சாதித்த எந்த பெண்களும் தன் உடலைக் காண்பித்து சாதிக்கவில்லை; மாறாக இருக்கும் பெண்களைத்தான் என் படைப்பில் சொல்லியிருக்கிறேன்...... N.Valarmathi..
உனது தாயும் , தங்கையும் . உன் மனைவியாக இருப்பவளும் உன் கவிதையும் ஒண்ணா .. அவர்களை நீ பெண்ணென்று பார்க்கிறாயா இல்லை ............bhanuki
என்றெல்லாம் கருத்துக்களை வேறொரு பாடலுக்கு இதே தளத்தில் எழுதியுள்ளவர்களை --விவாதத்திற்கு அல்லாமல்-தங்கள் மாற்றுக் கருத்துக்களை பெண்கள் இதற்கு மாறாக நல்ல பண்பும் நடத்தையும் உள்ளவர்களே என்னும் பாணியில் தங்கள் கவிதைகளை- கவிதைகளை மட்டுமே- தர அழைக்கிறேன்....