குழந்தைப் பாடல்..3 (சைக்கிள்)

3)குட்டிச் சைக்கிள்,,

குட்டிக் குட்டிச் சைக்கிளாம்..
குட்டி ஓட்டும் சைக்கிளாம்..
சுழட்டி சுழட்டி ஓட்டினால்
சுழன்று ஓடும் சைக்கிளாம்.

மூன்று சக்கர சைக்கிளாம்
முன்னும் பின்னும் ஓட்டலாம்.
சாய்ந்து குந்தி ஓட்டலாம்..
சாய்ந்திடாத சைக்கிளாம்.

வளைந்து வளைந்து ஓட்டலாம்.
வட்டமிட்டும் ஓட்டலாம்.
அம்மா அப்பா பிடிக்காமல்.
அப்படியே ஓட்டலாம்.

வீட்டுக்குள்ளும் ஓட்டலாம்..
வீதியிலும் ஓட்டலாம்.
காற்று இல்லா சைக்கிளாம்.
கவலை யின்றி ஓட்டலாம்..

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா. (10-Mar-13, 7:23 pm)
பார்வை : 124

மேலே