..............அந்தகாரம்............
வனங்களுக்குள்லிருந்து புறப்பட்ட இனம்,
வசதிவேண்டி அழிக்கத்துவங்கியது,
பச்சைத்தாவரங்களையும் நீண்டமரங்களையும்,
பயன்பாடு நவீனத்துவத்தில் அடியெடுத்துவைத்ததில்,
விண்ணுயர் கட்டிடங்கள் கண்கவர் கோபுரங்கள்,
மரங்களே கதவு ஜன்னல் கடந்து கடைசிவரைக்கும்,
அத்தனையும் உயிர்விட்ட உடலின் செத்தபாகங்கள் !
கையசைத்து காற்றுதருவித்தவர்கள் கட்டில்களாய் !
வேப்பம்தவிர்த்து ரத்தத்தை சுத்தப்படுத்திய குளிர்காற்று,
தட்பவெப்பம் தடுமாறி பெட்டிப்பாம்பாய் அறைக்குள் !
மரங்கள் ஆக்கப்படுகின்றன சவங்கள் போகிறபோக்கில்,
இங்கே சவபெட்டிக்கும் பாடைக்கும் மரமிருக்காது !
தப்பிப்பிழைக்கவும் நமக்குப்பின் சந்ததியிருக்காது !
வனம் அழிக்கும் அரக்கனானவனே !
காடு அழிந்தால் நாடு அழியும் !
கற்பனைக்கெட்டா பேரழிவு அரங்கேறும் !
அத்தனைக்கும் வித்திடுகிறாய் விளைவு தெரிந்தே !
மூச்சுத்திணறி முடிந்துபோக முனைந்து போராடுகிறாய் !
பச்சைநிறம் இனி பார்வையில் படுமா?
நீ போகிற கொடூர போக்கிற்கு?
கொச்சைப் படுத்துகிறாயே அந்த நிறத்தின் மகத்துவத்தையே !
போதும் நிறுத்து ! போதும் நிறுத்து !!
மரங்களை அறுத்தல் தாயின் கருவறையை அறுப்பதற்கு சமம் !!