வாழ்! வாழவிடு!! 26
உலகம் பிறந்தது எனக்காக.
ஓடும் நதிகளும் எனக்காக.
மலர்கள் மலர்வது எனக்காக -அன்னை
மடியைவிரித்தாள் எனக்காக .
மனிதா!
இதன் பொருள் அறி !
இயற்கை அன்னை
இவ்வளவும் தந்தது .
திண்றுவிட்டு தெருவில் வீசவோ ?
கொண்றுவிட்டு குப்பையில் வீசவோ ? இல்லை.
தான் கெட்ட குரங்கு
வனத்தையும் கெடுத்ததாம்.
ஒழுக்கம் கெட்டவன் ஊர்
பெண்ணை கெடுத்தானாம்.
உலகம் பிறந்தது உனக்காக !
நீ பிறந்தது உலகிற்காக !
உழைத்து வாழ்வதை மேன்மை எனக்கொள்.
ஏமாற்றி பிழைப்பதை கீழ்மை என தவிர்.
தாய்மையை போற்று.
பெண்மையை வாழவிடு.
இயற்கையை வளர விடு.
கீழ்மையை தவிர்த்து விடு.
சுயமரியாதையோடு சிறிது
பெற்றாலும் உச்சமே.
மரியாதை இழந்து எதைப் பெறினும் துச்சமே.
உனக்கு எவையெல்லாம்கிடைக்க வேண்டுமோ ? அவற்றை
நீயும் பிறர்கு கொடு.
வாழு ! வாழவிடு !!
வாழ விட்டு வாழ்.
ஜோஸப் கிரகரி ரூபன்.
11. 03. 13