கலை? விலை? 27
மலைமகளுக்கும்- மண்ணில்
கலைமகளுக்கும் -மற்றும்
திருமகளுக்கும் -கடும் போட்டியாம்.
காமுகரும் கயவரும் நடுவராம்.
தகுதி சுற்றிலேயே -மலை
தகுதியிழந்தது.கால்
இறுதியில் -கலை
விரக்தியால் விலகியது.
போட்டியின்றியே- திரு
பைனலாய் வென்றது. -உலகமே
திரு பின்னால் திரிந்தது.
ஆம் !
பணம்
உள்ளது அணைத்தையும் வென்றது.
பணம் உள்ளது மட்டுமே
அணைத்தையும் வென்றது.
மலைமகள் மண்ணோடுமண்ணாகி
மலடாகிப் போனாள்.
கலைமகள் கமர்சியலாகி
காஸ்ட்லியாகிப் போனாள்.
திருமகள் திருப்தியாகி
திருடரிடம் தூங்குகிறாள்
தீர்ப்புக்கு தப்புவித்து
திருடரைத் தாங்குகிறாள்.
காசு காசினியை சூழ்கிறது.
பணம் பாரை ஆள்கிறது.
குணம் குப்பையில் வீழ்கிறது.
மனம் வேதணை கொள்கிறது.
மாற்றம் வேண்டும் என்றவரால்
ஏற்றம் பெற்றது.
USA
USE. பண்ணிக்கொண்டது.
இங்கும்
மாற்றம் வேண்டும். எல்லாமும்
மாற வேண்டும். மாறவே வேண்டும்.
மாற்ற வேண்டும். நாம்
மாற்றிக்காட்ட வேண்டும்.
ஜோஸப் கிரகரி ரூபன்.
11. 03. 13