............சிட்டுக்கள்..........
உமது இரைச்சல்கள் இதமாய் வந்து கலந்ததுண்டு,
என் படுக்கையில் தூக்கத்தினூடே !
அந்தரத்தில் தொங்கும் தந்திக்கம்பிகளில்,
ஒய்யாரமாய் அமர்ந்திருக்குமே உமது கூட்டம் !
மொட்டைமாடிக்கு வரும்போதெல்லாம் ஓய்வின்றி,
வலமும்இடமும் பறந்து போக்குக்காட்டுவீரே கவனத்திற்கு !
எந்த இடத்தையும் பற்றியமர்ந்து குட்டி வாலாட்டும் கூட்டமே !
எங்கே போனீர் எமைக்கடந்து இங்கே இல்லாமல் !
துள்ளலாட்டம் போட்ட உமைக்கான தள்ளாட்டம் போடுது மனது !
அங்குமிங்கும் தேடுகிறேன் தொலைந்தபொருளை கண்டிடும் ஆர்வத்தில் !
காட்டவேண்டும் உமது குழுவை எமது குழந்தைக்கூட்டத்திற்கு !
காதில் விழுகிறது !!
"சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டன"
எனும் செய்தி பற்றவைத்த தீயாய் !
விம்மிப் புடைக்கிறது நெஞ்சம் !
மரணம் வரலாம் பிறப்பு ஈடுசெய்யும் !
தனிமை வரலாம் இனிமை ஈடு செய்யும் !
இனம் அழியும் கொடுமை எந்த முடிவைத்தரும் ?
தடயங்களைத் தேடவேண்டுமா இனி குருவிகளுக்கு ?
அவைகளை குழந்தைகளாய்ப்பார்த்து குழந்தையாகியிருக்கிறேன் !
அச்சிறிய ஜீவன்களிடம் சிந்தை சிறைப்பட்டதும் உண்டு !
சென்றுவிட்ட உமக்காக நின்றுபெய்கிறது கண்ணீர் மழை !
என்செய்து எப்படி கொணர்வது உணர்வது உமது அருகாமையை ?
எதன் வளர்ச்சியில் துவங்கியது உமது வீழ்ச்சி ?
கண்ணெதிரே அழிந்துவிட்டவரே !
காணக் கிடைப்பீரா இனி ?
உறவைத்துண்டித்த பறவைகளே சிட்டுக்குருவிகளே !!
"உள்ளத்தில் வெறுமையாகவே உமக்கான இடம்"