தண்டனை அவசியம்
நம்பவில்லை விதி என்பதை
தவறில்லை அது பகுத்தறிவு !
உதவிடும் உள்ளத்தின் சாட்சியா
செய்திடும் சேவையின் காட்சியா
விதியை மீறுவது விளையாட்டா
விதியெனும் சொல்லே ஒவ்வாதா !
ஆபத்தை தேடி செல்வதே ஆபத்து
விபத்தை நாடுவதும் விபரீதம் !
சாலை என்ன சர்க்கஸ் கூடாரமா
கூரை இல்லா குடிலின் உட்புறமா !
தண்டனை அவசியம் இவருக்கு
தவறான வழியில் செல்வோருக்கு !
பழனி குமார்