ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க கோரி

ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க கோரி மாணவ மாணவிகள் மதுரையில் 14.03.2013 அன்று பேரணி...

ஈழத்தமிழர்களுக்கு நியாம் கிடைக்க கோரி...
தமிழீழ பகுதியில் இருந்து இனவெறி சிங்கள் இராணுவத்தை வெளியேற்ற கோரி...
பன்னாட்டு விசாரணை அமைத்து இராஜபக்சே மற்றும் இலங்கை அரசை உலக மாமன்றத்தின் குற்றவாளி கூண்டில் ஏற்ற கோரி...
ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு அமைக்க கோரி..
இவையனைத்தையும் ஐநா வில் தீர்மானமாக இந்திய அரசே கொண்டு வர கோரி
மாணவ, மாணவிகள் நடத்தும் மாபெரும் பேரணி.....

கே.கே. நகர் மதுரை மாவட்ட நீதிமன்றம் தொடங்கி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை... பேரணி நடைபெறுகிறது..
நாள் : 14.03.2013 (வியாழன்)
நேரம் காலை 10 மணி
தொடர்புக்கு : 9543663443, 9080936365, 9791432380

இந்த போராட்டம் எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் சுயமாக நம் மாணவ மாணவியர்களின் கொதிக்கும் தமிழின உணர்வால் நடைபெறுகிறது.. இப்போராட்டத்தின் தலைமை நம் கோரிக்கைகள் மட்டுமே...

இந்த ஒரு போராட்டத்தின் வழியாக நம் கோரிக்கைகள் அனைத்தும் வென்றுவிடும் என்கிற நம்பிக்கை துளியுமில்லை. ஆகவே வெற்றியை அடையும் வரை, நம் ஈழத்தமிழ் தேசத்தவர்களுக்கு நியாம் கிடைக்கும் வரை பல வடிவங்களில் தொடர் போராட்டமாக இதை ஒட்டுமொத்த இளையசக்திகளும் இணைந்து வழிநடத்தும். இந்தியா முழுக்க இப்போராட்டம் வெடிக்க செய்வோம்.. உலகம் முழுக்க அதிர செய்வோம்....

இத்தகவலை மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள அனைத்து பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். போராட்டத்தில் பங்கெடுத்து கொள்ளுங்கள்.

களத்தில் சந்திப்போம்...
---- தமிழ்தாசன் ---

எழுதியவர் : தமிழ்தாசன் (13-Mar-13, 12:49 am)
சேர்த்தது : தமிழ்தாசன்
பார்வை : 133

மேலே