இத்தனை நாளாக எங்கே போனீர்கள் ?
கும்பகர்ணன் தூங்கி விழிப்பது அபூர்வம் என்பார்கள். அப்படித்தான் ஆகிவிட்டது தமிழக அரசியல் கட்சிகளின் நிலை. இலங்கை பிரச்னை இன்று நேற்று அல்ல. பல ஆண்டுகளாகவே தொடர்கிறது. ஆனால் இன்று முளைத்த பிரச்னை போலவும் புதருக்கு ஞானம் பிறந்தது போலவும் இருக்கிறது தமிழக கட்சிகளின் நிலை. கேவலம் ஒட்டு வாங்குவதற்காக திடீர் நாடகம் நடத்துகிறார்கள் இவர்கள். கடந்த ஆண்டு படுகொலை நடந்தபோது இத்தனை வேகமும் போராட்டமும் நடதீருந்தால் பலன் கிட்டி இருக்கும். தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அணைத்து கட்சிகளுமே வேஷம் போடுவது தேவையா ? எனவே இவர்களை நம்பி தமிழர்கள் ஒட்டு போடுவார்களா . பார்ப்போம்.