நன்றிகள் பகர்கிறோம்
என்
தமிழ் நாட்டுத்
தம்பியர்கும்
தங்கையர்க்கும்
தன்னிகரில்லா தமிழ் சொல்லும்
பல் கோடி நன்றிகள்.....
ஆண்ட இனம் மாண்டுபோனோம்
மீண்டுவர, குரல்கொடுக்க,கைகொடுக்க
தாயற்ற மகவுகளாய் தனியரானோம்
பேய்கழும் பொல்லா நரிகளும்
அரியணையேறின அரிகளாக.
அரிய மனம் ஏவினாலும் அரிகளை
அரிய கரம் கூட இல்லா நிலை அங்கு...
அலை தொடும் உறவுகளே
அலையும் தமிழினம் தான் நாம் உலகெங்கும்
நிலையான நீதி வேண்டி எமக்காக குரல் கொடுக்கும்
கடல் கடந்த சொந்தங்களே....
சிரம் தாழ்த்தி நன்றிகள் பகர்கிறோம்
ஒலிக்கட்டும் உங்கள் குரல் ஐநா வரை
கிடைக்கட்டும் தமிழர்க்கு நீதி அது.......
.