குழந்தைப்பருவம்
மகனே
நீ பிறந்து, பின் தவழ்ந்து
நடக்க முயன்று தவறி விழுந்து
உன் சட்டையை நீயே அணிய துணிந்து
அதை தலைகீழாய் அணிந்து அழுதுநிற்பாய்
தினமும் புது முயற்சிகள் செய்து
நானும் வளர்ந்து கொண்டிருக்கிறேன்
என்பதை எனக்குச் சொல்லாமல் சொல்வாய்
உன் கலங்கமில்லா சிரிப்பு
உன் குறும்பு,உன் கோபம்
உன் மழலைமொழி,
உன் தேவைகளுக்கான அழுகை
இப்படி நீ செய்யும் ஒவ்வொன்றும்
புதிதாய் தோன்றும் எனக்கு
உன்னோடு நானிருக்கும்போது
என் உலகம் மறந்து
உன் உலகில் வாழ்கின்றேன்.
நானும் உன்னோடு சேர்ந்து வளர்கிறேன்
என்பதுதான் உண்மை.