உன் போர்க்குணம் எங்கே?
ஏன் நண்பா
என்னவோ போலிரிக்கிறாய்?
உன் மூளைப் பிரதேசத்தில்
முரண்பாட்டுச் சுழலா?
உன் திறன்பாடு
பயன்பாடு பெறாமல்
பாதாளத்தில் புதைந்ததா?
உனது உரிமைகள்
ஊழல்பேர்வழிகளால்
களவாடப் பட்டத?
உன் கொள்கை வயலின் எல்கைக்குள்
கொடிய விலங்குகள் நுழைந்து கேடிளைத்தனவா?
சரி, போகட்டும்,
உன் போர்குணம்
எங்கே புளியங்காய் பறிக்கப் போயிற்று?
பாலு குருசுவாமி.