காலம் மறந்து
நீ என்னை பார்த்த நொடிப்பொழுதில்
என் இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம்
எல்லாம் மறந்து
உன்னோடே என் ஆயுட்காலம் முழுவதும்
கழிக்க நினைத்தேன்
நீ என்னுடன் இருக்கும்போது
இந்த உலகம் புதிதாய் தோன்றும்
தினமும் என்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள் கூட
அழகாய்த்தோன்றும்.
நான் உண்ண மறந்து உறங்க மறந்து
உன் நினைவிலே வாழ்கிறேன்
உன்னை தினமும் பார்ப்பேன் என்றே
என் விடியலும் விடியும்.
கடவுள் படைத்த படைப்புகளில்
சிறந்ததாக கூறப்படும் சிலவற்றில்
உன் பெயரை முதலில் எழுது.