வண்ணக்கலவரங்கள்
காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்
காதலித்தபின் நான் நானாக இல்லை
என் வாழ்க்கை எனும் புத்தகத்தில்
எங்கும் நீயே நிறைந்திருக்கிறாய்.
காதலித்தபின் எல்லாம் அழகாய்த்தோன்றுகிறது.
உன்னோடு நான் இருக்கும் தருணங்கள்
உனக்காக காத்திருக்கும் அந்த நிமிடங்கள்
அவை தரும்என் இதயத்தில்
ஏனோ வண்ணக்கலவரங்கள்
நீ என்னுள் உறங்கி கனவுகளை தருகிறாய்
நான் உன்னால் உருகி கவிதையாய் பிறக்கிறேன்.