மெல்ல மெல்ல மாணவர்களின் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன...ஒடுக்கப்படும்..!
மெல்ல மெல்ல மாணவர்களின் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன...ஒடுக்கப்படும்..!
யார் பூனைக்கு மணி கட்டுவது என்று இருந்த நேரத்தில் லயோலா கல்லூரி மாணவர்கள் துவக்கினார்கள் தங்களது உண்ணாவிரதத்தை..தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் முதல் பரவி பற்றி எரிந்தது...எரிந்து கொண்டிருக்கும்... முதலில் ஜெ ஆட்சிக்கு வந்தவுடன் சட்டசபை தீர்மானம்..பிறகு வரிசையாக தமிழ் தேசிய அமைப்புகளின் தொடர் போராட்டம்..என்று போய்க் கொண்டிருக்கையில்...மாணவர்களை வைத்து அரசியல் செய்து பின்பு அதே மாணவர்களை நசுக்கியும் அடைக்கியும் வந்துள்ள திமுக விற்கோ ஜெ யைவிட, வைக்கோவை விட, சீமான் மற்றும் தமிழ் தேசிய அமைப்புகளை விட ஒருபடியாவது முன்னேறிட வேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும்...!
தற்போதைய இந்திய அரசியலில் பழம் பெரும் அரசியல்வாதியான திமுக வின் தலைமைக்கோ என்ன செய்யலாம்...ஏது செய்யலாம் என்றிருக்கையில், குப்பையில் கிடந்த டேசொவை கையில் எடுத்து தேசிய மற்றும் மாநில அரசியல் சூழல்களை தனக்கு ஏற்றவாறு உருவாக்கிக் கொள்ளலாம் என்று காய் நகர்த்திக் கொண்டிருக்கையில் தான்..இந்த லயோலா கல்லூரி மாணவர்கள் திடீரென்று புகுந்து போராட ஆரம்பித்து விட...டேசொவின் கைகளில் சிக்கித் தவித்துக் கொடிருந்த ஈழ பிரச்சனையும்.. திமுகவின் டேசொவை அதிமுக அரசு எவ்வாறு ஓவர் டேக் பண்ணலாம் என்றிந்த நிலையில் தான்... இந்த லயோலா கல்லூரி மாணவர்கள் தொடங்கி வைத்து இன்று தமிழ் நாடு முழுதும் உள்ள கல்லூரி மாணவர்கள் கைகளில் சென்று விட்டன..
இந்த மாணவர்களின் போராட்டங்கள் இதுவரை திமுக விற்கு எதிராகவும்...காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் மாறும்வரை பொறுமை காத்த அதிமுக அரசு...தற்போது இந்த மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளன. அல்லது அவ்வாறு மத்திய அரசு உயர் அதிகாரிகளால் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளன...
இந்த மாணவர்கள் போராட்டம் அடுத்து எந்தக் கட்டத்தை நோக்கி நகரும் என்று அணைத்து கட்சிகளுக்கும் அரசுக்கும் நன்றாக தெரிந்த காரணத்தால் அவற்றை கண்டிப்பாக ஒடுக்கியே தீருவார்கள்.
அணைத்து அரசியல் கட்சிகளையும் மாணவர்கள் புறக்கணித்து விட்டனர்...மாணவர்களால் ஆன புதிய தலைமை...போராட்டக் கூட்டுக்குழு..ஒருங்கிணைப்புக்குழு என்று மாணவர்கள் சிந்திக்க துவங்கி விட்டனர்..அரசும் ஒவ்வொரு கல்லூரி பல்கலைகழகங்கள் என்று காலவரையற்ற மூடுவிழா செய்ய துவங்கி விட்டார்கள்..இனி மாணவர்களின் அணைத்து கல்லூரிகளையும் தங்கும் விடுதிகளையும் மூடிவிடுவார்கள்...இதன் மூலம் போராடும் மாணவர்களின் வேகத்தை குறைக்கலாம் எனபது அரசின் யோசனையாகக் கூட இருக்கலாம். ஆனால் அதிமுக அரசுக்கு இந்த மாணவர்களின் வாக்குகளை..பொதுமக்களின் வாக்குகளை அப்படியே அள்ள வேண்டும் என்ற நிலையம் தேவையும் உள்ளன.
திமுக விற்கோ எப்பாடுபட்டாவது டெசோ தோல்வி அடைந்து விடக்கூடாது என்ற நிர்பந்தமும் உள்ளது..இப்பொழுது உள்ள இலங்கையின் போராட்ட சூழலை தனக்கு ஏற்றவாறு மாற்றியே தீரவேண்டும். காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்தாக் கூட அது திமுக விற்கு சாதகமாக மாறப்போவதில்லை...அய்யா கி.வீரமணி சொல்வதைப் போல நடக்காது என்று தான் தோன்றுகிறது...தாக்க தாக்க தகத்தகாய என்றெல்லாம் வளராது போல தெரிகிறது...அதனால் தான் கி.வீரமணி எச்சரிக்கை மணி ஒலித்துள்ளார் என்று கருதலாம்.
என்றாலும் 2009 - சூழல் இன்று இல்லை...நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய இந்த மாணவர் போராட்டங்களுக்கும் முந்தைய மாணவர்கள் போராட்டங்களுக்கும் பெருமளவு வித்தியாசங்கள் உள்ளன. இந்த வித்தியாசங்களை அவ்வளவு எளிதாக வெந்நீர் ஊற்றி அணைக்க முடியாது என்றே கருதலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!
சங்கிலிக்கருப்பு