இவர்களைப் போற்றி சில வெண் (பா) தூறல்கள் (ஒரு பயிற்சி)

..........................உழவர்........................................
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உண்டி கொடுத்தே ஊண்வளர்த்தார் உலகில்
அண்டியோர்க்கெல்லாம் நிழல்மரமாம்-நொண்டி
அடிக்கும் உம்வாழ்வைக் காணக் கண்ணீர்
வடிக்குதே கண்கள் உழவரே.!
...................................................................................
..........................ஆசிரியர்........................................
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மண்புழுதியாய் வந்த மாணாக்கரை எல்லாம்
கண்மணியாய் காத்து கல்வி தந்தனர்-விண்
மிளிரும் விண்மீனாய் எம்வாழ்வைக்
துளிரச் செய்தீர் ஆசிரியரே.!
..................................................................................
............எல்லை பாதுகாப்பு வீரன்......................
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கும் அரணாம்
உற்ற உறவுகள் பிரிந்தும் கடமையாம்-சுற்றி
எல்லா திசைபகையும் தாங்கும் சூரனே
எல்லைப் பாதுகாப்பு வீரனே.!
....................................................................................
......................உழைப்பாளிகள்.............................
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அயர்விலாது உழைத்தும் உயராதோ உந்நிலை
வியர்வை வடித்தும் வாடாதோ வாட்டம்-உயர்வை
பிழைப்பால் தேடும் பட்டாளிக் கூட்டம்
உழைப்பால் உயர்வரே என்றும்.!
...................................................................................
..........................இளைஞன்................................
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தண்ணீரில் தானேயெழும் தாமரைப் பூவாய்
தன்னம்பிக்கை கொள்ளக் கடவாய்-என்னாளும்
மிரட்சி வேண்டாமே புதியஇந்தியா செய்ய
புரட்சி செய்வாயோ இளைஞனே.!
..................................................................................
வெண்பாவில் பிழைகள் இருக்கலாம், இது ஒரு பயிற்சியே.. பிழை இருப்பின் தெரிந்தவர்கள் சுட்டலாம்.