என் அருகில் நீ இல்லை...
அதிகாலை
அழகான கோலம்
அமைதியாய் ரசித்திட
என் அருகில்
நீ இல்லை...
நீர் இறைத்து
நீ இறைத்து,நீரை
என்மீது இறைத்து
நீராடிட- என் அருகில்
நீ இல்லை...
காலத்தோடு
காலை உணவு
மடி மீது அமரவைத்து
மகிழ்ந்துண்ண- என் அருகில்
நீ இல்லை...
நடுப்பகலில் ஓர்
தொலைக்காட்சி நாடகம்
நம்மிருவரும் அதனுள்
தொலைய, என் அருகில்
நீ இல்லை...
மாலை வரை
மயங்கி நானுறங்க
உன் இதழ் வைத்து
விழி திறக்க என் அருகில்
நீ இல்லை...
மஞ்சள் மாலை
மயக்கும் தூறல்
ஒரு கோப்பை தேநீர்
பகிர்ந்து ருசிக்க,என் அருகில்
நீ இல்லை...
மொட்டை மாடி
ஒற்றை கட்டில்
பனிக்காற்று
கருப்பு வானம்
வெண் நட்சத்திர
கூட்டத்தினூடே
வெள்ளை நிலவோடு
இந்த விதவையும்
விழிமூடாமல்
உந்தன் நினைவுகளோடு...
-PRIYA

