சிறு சிந்தனை வரிகள்

அதிகாலையில்
மண் மீது பூத்த
பறிக்க இயலாத
தொடுக்க இயலாத
வண்ண வண்ண பூக்கள்
வாசமின்றி வாசலில்...
***********************************************
காற்றில் உலரவைக்கப்பட்ட
தாவணி கழிப்பிடமானது
காக்கையின் எச்சம்...
*************************************************
தந்தையின் கோபத்தை
அடிக்கடி ஞாபகப்படுத்தும்
நெளிந்த செம்பு...
***************************************************
வெள்ளி நிலவும்
வெண் நட்சத்திரமும்
இரவோடு உறவாடுவது
ஆதவன் ஆழ்ந்துறங்கும் நேரம்
*****************************************************
வெற்றிலையும், பாக்கும்
சுண்ணாம்பும், சுமந்த
வெற்றிலைபெட்டி
வெள்ளி என்பதால்
அலமாரியில்
பாதுகாப்போடு....
தாத்தாவின் புகைப்படமோ
பழைய அறையில்
ஒரு மூலையில்....
**********************************************************
உள்ளங்கையில் உலகம்
ஆட்காட்டி விரலால்
தொட்டால் உரையாடும்
ஓர் உன்னதம்
தொடுதிரை அலைபேசி...
**********************************************************
பல கிழிசலோடு ஏழை உடை
கிழிசலே உடையாகி போன
மேற்கத்திய ஆடைகள்...
*******************************************************
இலவசமென்றால்
இலவபஞ்சாசக பறக்கும்
சமுதாயம்...
காசு என்றால் காலை பிடித்தும்
கும்பிடும் கூட்டம்...
*******************************************************
ஆட்சி செய்யும்
வருடங்களில்
பிடுங்குகிற பிச்சை
பாத்திரங்கள்
அரசியல்வாதியின் சொத்துக்கள்...

-PRIYA

எழுதியவர் : PRIYA (22-Mar-13, 12:55 am)
பார்வை : 494

மேலே