விழித்தெழடா தமிழா - பகுதி 2!!!

தனக்குச் சொந்தமான நிலத்தையும், செல்வங்களையும் பக்கத்து வீட்டுக்காரன் அபகரிக்கும்பொழுது விழிப்போடு இருக்கின்றோம். அவன் பிள்ளைகுட்டிகாரன், ஏழை என்று விட்டு கொடுக்கின்றோமா? தனக்கென்று ஒரு வாரிசு வரும் அவர்களுக்கு இவையெல்லாம் தேவையென்று இல்லாத வாரிசுக்கு தன் சொந்த, பந்தங்களோடு உயிரை கொடுத்து போராடுகின்றோம். ஏன்? அத்தகைய போராட்டம் இல்லையென்றால் நாம் அழிந்துவிடுவோம். அடுத்து வரப்போகும் நம் வாரிசுகள் தெருவோரத்தில் கேப்பாரற்று கிடப்பார்கள். அதைப் போன்றுதான் தமிழ் ஈழ மக்களின் இன்றைய நிலை. அவர்கள் யார், அவர்களுக்கும் நமக்கும் என்ன உறவு? அவர்களுக்காக எதற்கு நாம் போராட வேண்டுமென்று கேள்விகள் எழுப்பும் சில கூட்டங்களும் இந்த பாழாய் போன தேசத்தில் உலா வருகின்றன.

தமிழனாக பிறந்த அனைவருக்கும் தமிழ் உணர்வென்று ஒன்று வேண்டும். சங்க கால ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்தால் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இலங்கை தமிழனின் பூர்வீகமாக இருந்துள்ளது. அவர்கள் அனைவரும் நமது சொந்தங்கள். மொழியாலும், உணர்வாலும், உடலாலும் தொப்புள் கொடி உறவுகள்.

பிழைக்க வந்த தெருநாய் கூட்டத்திற்கு பெருந்தன்மையாக வாழ இடம் விட்டுக்கொடுத்துவிட்டு இப்பொழுது கடி படுகின்றார்கள். ஆனால் அதை அறிந்தும் நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை. கேட்டால் நாம் என்ன செய்வது? நம்மால் என்ன செய்ய முடியும்? அவர்கள் அயல் நாட்டை சேர்ந்தவர்களென்று கூறும் மக்கள் கூட்டம் ஒரு பக்கம், அரசியலை காரணம் காட்டி அமைதி கொள்ளும் மக்கள் கூட்டம் மற்றொரு பக்கம். இந்த உணர்வற்ற நிலை இன்னும் சிறிது காலம் தொடருமென்றால் தமிழும், தமிழின அழிவும் வெகுதூரமில்லை என்பதுமட்டும் உறுதி.

உணர்வுகளை இழந்த பிணங்களையும், ஒன்றுக்கும் உதவாத அரசியல்வாதிகளையும் நம்பிக்கொண்டிருந்தால் ஈழத்தில் முட்செடிகள் அதிகமாகிவிடும். இவர்களை நம்புவதில் எந்தவித பயனுமில்லை. எனவே நமக்குண்டான சிக்கல்களை நாமாகத்தான் அவிழ்தெறிய வேண்டும். அவர்களுக்கு நாம் கொண்ட வலியின் வேதணை புலப்படாது. அதை அறிந்தாலும் கூட அவர்களால் அதை உணர இயலாது.

ஒரு கடல் தாண்டிப் போராடுவதும், சிங்கள நாய்களை அடியோடு அழிக்க நினைப்பதும் இயலாத காரியமாக இருந்தாலும் கூட தமிழ் உணர்வால் தமிழர்கள் அனைவரும் அவரவர் இருக்கும் பகுதிகளிலேயே பெருந்திரலாக ஒன்றுபட்டு நம் உயிர் உள்ளவரை போராடி உலகளவில் சிங்கள நாய்கள் கூட்டத்திற்கு கரும்புள்ளி தரச்செய்து அவர்களை கழுதை மேல் ஏற்றிக் காணா பிணமாக்க முடியும். அவ்வாறு அவர்களை உருகுலையவைக்க ஒவ்வொரு தமிழனும் விழித்தெழ வேண்டும். தமிழன் யாரென்று அவர்களுக்கு காட்ட வேண்டும். உண்மையான உழைப்பும், உணர்வும் ஒன்றுபட்டால் நாளை ஈழத்தில் மலரப்போகும் மலர்களுக்கு அழகும், மணமும் தானாக அமையுமென்பதில் எந்தவித ஐய்யமுமில்லை. அதுதான் ஈழத்திற்காக உயிரை கொடுத்த வீர வேங்கைகளுக்கு நாம் செலுத்தும் வீர மரியாதையாக அமையும். எனவே அந்த வகையில் அனைத்து தமிழர்களும் உணர்வால் ஒன்றுபட்டு தமிழையும், தமிழனையும் காக்க முழு மூச்சுடன் போராடவேண்டும். அப்படி இல்லையென்றால் உடன்பிறவா சகோதரி இசைப்பிரியாவைப் போன்று நாளை தமிழின நிலை கேள்விக்குறிதான். எனவே "விழித்தெழடா தமிழா, புதுயுகம் படைத்திடடா தமிழா" என்ற வீர முழக்கத்தோடு நாமும் தமிழின போராளியாகிடுவோம்...

எழுதியவர் : கார்த்திக்... (22-Mar-13, 12:23 am)
பார்வை : 177

மேலே