தேடிக்கொண்டிருகிறேன்......

எண்ணங்களில் மின்னிச்செல்லும்
உன் நினைவுகளால்
உலகை மறந்தேன் சில நொடி..
அடுத்த கணமே அழுகை வர
மின்னல்கள் இடியாய் மாறி என் மேல் விழுந்தன!
உன் நினைவுகளை நெஞ்சில் சுமந்து
நான் நகைப்பதா...?அழுவதா...?
கடும் பாலைவனத்தில்,தாளாத தாகத்தில்
உன் நினைவுகள் நீராய்த் தெரிய
நெகிழ்ந்து போய் நெருங்கினேன்,
நெருங்கிய சில நொடிகளில்
அவை கானல் நீராய் மாறிவிட
கண்களில் இருந்து சுரந்துவிட்டன
கண்ணீர்த் துளிகள்!
காணல் நீராய் வந்து
ஏமாற்றிய எண்ணங்களை நினைக்கையில்
தாகத் தவிப்பே மேல் என பட்டது!
நினைவாகத நினைவுகளுக்காக
நித்திரை இழக்கும் நங்கையின் மனது
நிஜத்தை புரிந்துகொள்ள
நாட்களை எண்ணுகிறது...
அழகுக்கும்,வாசத்திற்கும்
குறைவிலாத அழகிய மலர் தாழம்பூ
ஆனால் அருகில் சென்று நுகர்ந்தாலே
மூர்சையாகிவிடுவோம்
அதுபோலவே உன் நினைவுகளும்
நினைவோடு நின்று விடுவாய் என தெரிந்தும்
ஏனோ மறக்க மறுக்கிறது மனம்!
உலகபோர்களையும் மிஞ்சிவிடும் போல
என் உள்மனதின் போராட்டம்
நினைவுகளை கடந்து,
உன் நிழல்களை மறந்து,
நிஜ உலகில்,தெளிந்த மனதில்
வழ ஆசைப்படுகிறது
இந்த அற்ப மனது....!
வழி தெரியா காடு,விடை தெரியா கேள்வி
எது சொன்னாலும் மிஞ்சிவிடும்
என் மனக்கவலை!
நிஜங்களை நினைத்து நகரத் தொடங்கும்
என் வாழ்வை
இன்னும் தேடிகொண்டேதான் இருக்கிறேன்
கண்களில் ஏக்கத்தோடு....!