கனவில்தான் செல்வேன்

இணைந்திடும் எண்ணமுடன்
இருபுறமும் மரக்கிளைகள் !

சீராக செப்பனிட்ட சாலை
நேரான பாதையில் சோலை !

பசுமைக் காட்சியும் தந்திடும்
குளுமை நம் விழிகளுக்கு !

ஏக்கம் ஏறுகிறது எனக்குள்
எப்படியும் பயணம் செய்திட !

தாக்கம் பிறக்குது நெஞ்சில்
தமிழகமும் மாறுமா என்று !

தூரிகை மந்திரம் போன்று
தூசில்லா சாலை நன்று !

நடைபயணம் சென்றால் இதிலே
இடையும் சுருங்கிடும் அன்றோ !

கனவில்தான் செல்வேன் நானும்
நினைவில் நடவாது இங்கே !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (23-Mar-13, 2:51 pm)
பார்வை : 135

மேலே