புகை பழக்கத்தை பொசுக்குவோம்.....
உணர்வோம் எதிர்த்து குரல் கொடுப்போம்.......
ஏனெனில் புகை நமக்கு பகை....
அடுப்பு புகைவதால் இல்லை....
உன் விரலில் நெருப்பு புகைவதால் தான்
இன்னும் பொங்கவே இல்லை....
நம் வீட்டில் உலை பானை....
காது வளையம் கூட இல்லாமல் நான் நிற்க....
நீயோ புகையில் வளையம் செய்து
ஊதாரியே என் வாழ்வில் விளையாடுகிறாய்....
உன்னை நம்பி பிடித்த விரல்களை
சிகரெட்டால் தினமும் தண்டித்து சுடுகிறாய்....
என் கண்ணீரின் ஈரத்தில் கூட கனிந்து கொண்டே சிவக்கிறது....
என் கண்கள் அல்ல
உன் சிகரெட் முனை....