எனது குறிப்பேட்டின் பக்கங்கள்...[1]

இரகசியமானதுதான் காதல்
என்றாலும்
அது காதலர் நமக்குள் இருக்கலாமா ?
இரகசியங்கள் பொதிந்த
இதய குறிப்பேட்டினை [டைரியை]
திறப்போம் வா
அங்கு
உன்மேலான காதல்
உன் மேலான காதல்
புதிய சரித்திரமாவதைக்
காணலாம் !
[1]
*****
என் இதயக் குறிப்பேட்டில்
பதியப்பட்ட
உனக்கும் எனக்குமான செய்திகள்
ஏராளம்
நீ படித்து முடிப்பதுதான் எப்போதோ
இன்னும் புரட்டிப் பார்க்கவே
நினக்காத நிலையில் !
[ 2]
******
நேற்றுவரை
முகம் பார்க்கும் கண்ணாடிகூட
என் முகத்தை விரும்பியிருக்க
வாய்ப்பில்லை
உன் பார்வை
என்மேல் பட்டபின்
இதுவரைக்கும் இல்லாத அழகுடன்
காட்டுகிறது என்னை !
[ 3]
******
[பக்கம் 2 தொடரும்...]