நீ நீயாகவே இருப்பாய்
நண்பனின் மணவிழாவுக்கு
செல்ல முடியாவிடிலும்,
எதிரியின் மரணவீட்டுக்கு
தவறாமல் சென்றிடு!
உன் உள்ளம்
ரணமாகி அழும்
வேளையிலும் ஒரு
குழந்தையின் அழுகையை
ஆற்றிட பாடுபடு!
சுமக்க இயலா
பாரம் தலைச்சுமந்து
நடக்க நேரிடிலும்
புற்களின் மீது
கால்பதியாமல் கவனமாய்
நடை மேற்கொள்!
போட்டியிடு பொறமைதவிர்
வெற்றிபெற்றால் உன்னோடு
போட்டியிட்டு தோற்றுப்போனவனை
கட்டித்தழுவி நன்கு
போட்டியிட்டீர் இன்னும்
சிற்சில நொடிகள்
நீடித்து இருந்தால்
நான் தங்களிடம்
தோற்றுப்போய் இருப்பேன்
என உற்சாகப்படுத்து!
ஒருவேளை தோற்றிருந்தால்
உன்னோடு போட்டியிட்டு
வெற்றியடைந்தவனோடு கைகுலுக்கி
தங்களிடம் கற்கவேண்டியது
நிறைவாய் உள்ளதென
மனம்விட்டு வாழ்த்தி
போற்றி புகழ்ந்துபேசு !
இப்பொழுது உன்னுடற்
சிந்தும் வேர்வை
துளிகளிலும் பல
விதைகள் முளைத்துவிடும்!
நீ நிற்கும்
இடத்தில்லிருந்தே சான்றோர்களின்
வரிசை ஆரம்பித்திருக்கும்!
நீ வெற்றியடைந்தால்
உனை சுற்றியுள்ள
அனைவரையும் அதனை
கொண்டாடுவர்!
நீ தோற்றிருந்தால்
அவர்கள் அனைவரும்
உனக்காய் கலங்கி
நிற்ப்பர்!
ஆனால் நீயோ
நீயாகவே இருப்பாய்
உன் நிகரில்லா
தனித்தன்மையோடு!

