அகதிகளற்ற தமிழகம்....
இலங்கைத் தமிழர்களுக்காக
இங்கே உயிரிழக்கவும்
துணியும் என்
அன்பு இதயங்களே...
எப்படி மறந்தீர்கள்
நம் தமிழகத்திலும்
வாழ வழியின்றி,
வயிற்றுப் பசிக்கு உணவின்றி
தினம் வாழ்வோடு போராடி வாழும்
நம்மகத்தின் அகதிகளை...?
உயிர் கொடுக்க வேண்டாம்
அவர்களின் வயிற்றுப் பசிக்கு
உணவிடவேனும் உதவலாமே...
ஈழத் தமிழர்களுக்கு
தனி ஈழம் கேட்டுப் போராடும்
என் இனிய நண்பர்களே...,
என்றாவது கேட்டிருப்போமா
நம்மகத்தின் தமிழனுக்கு தங்க தனி இடம் வேண்டுமென்று...?
நம் போராட்த்தின் முடிவில்,
மிக விரைவில்,
தனி ஈழம் காணப்போவது உறுதியே....!
ஆனால்.......,
எப்போது காணப்போகிறோம்
அகதிகளற்ற நம் தமிழகத்தை....???