உன்னை சந்தித்தேன் ஏன் கற்பனையில்

நெடுந்தூரம்..........
அந்த பயணத்தின் பாரம்
அது ஒரு அழகிய நேரம்
நான் சிந்திக்கவில்லை
நாம் சந்திப்போமென்று
நாம் சந்தித்தபிறகு, சிந்தித்துப்பார்த்தால்
அந்த சந்திப்பில் இருந்த சிறு துன்பம்
நம்மால் மறுக்கமுடியாத இன்பம்!......

தனிமையின் பெயராய் நான் இருந்தேனென்று நீ
என்னிடம் கூறியபோது..........
அந்த தனிமையின் அமைதியாய் நான் இருந்திருக்கக்குடாதா என்று ஏங்கினேன்.....

உன்னுடன் இருந்த அந்த நொடிகள் மீண்டும்
என்று வருமோ?.........

என்றும் என்
கற்பனை அனைத்தும் உனக்கே சொந்தம்..............



***********இன்னும் சிந்திப்பாள் இவள்***********
@வைதீகா@

எழுதியவர் : vaitheekas (2-Apr-13, 9:50 pm)
பார்வை : 145

மேலே