கருமமே கண்ணாயினார்
பிறந்தவர் வாழ்வதும்
வாழ்பவர் உய்வதும்
உயப்பவர் நிலைப்பதும்
நிலைப்பவர் மகிழ்வதும்
மகிழ்பவர் நிறைவதும்
நிறைந்தவர் இருப்பதும்
இருப்பவர் உழல்வதும்
பூமியெனும் நம் உலகம் !
வளமோ வசதியோ
நலமோடு என்றுமே
பசிஇல்லா பாமரனாய்
அரை வயிறு நிரம்பிடவே
கொட்டும் மழையிலும்
சுயதொழில் செய்திடும்
தூய நெஞ்சுள்ள இவரே
கருமமே கண்ணாயினார் !
பழனி குமார்

